Tuesday, August 31, 2010

“மற்றவர்கள் விரும்புவதைக் கொடுப்பதும், அதை அவர்கள் அடைய விரும்புவதும்தான் வெற்றிக்கான பாதையாக அமையும்”


//“மற்றவர்கள் விரும்புவதைக் கொடுப்பதும், அதை அவர்கள் அடைய விரும்புவதும்தான் வெற்றிக்கான பாதையாக அமையும்”//



இதற்க்கு தகுந்த ஒரு உண்மை சம்பவம்..சிறுவன் ஒருவனுக்கு 12 வயதான போது மோசமான போலியோ தாக்கியது,உங்கள் மகன் இந்த இரவை தாண்டுவது கஷ்டம் என்று தன் பெற்றோரிடத்ல் மருத்துவர் சொல்வதை அவன் கேட்டுவிட்டான்..இதை கேட்ட அவன் அம்மா அழுகையின் உச்சதிறிக்கு சென்றுவிட்டால்..இந்த இரவை கடந்துவிட்டால்,அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்ம்பினான்.."அந்த இரவு இரவு முழுக்க தூங்கமல் விழித்திருந்தான்"விடிந்தததும் அம்மாவை உலுக்கி"அம்மா பாருங்கள் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்"என்று கட்டி தழுவினான் தன் தாயை..அன்று அவன் பார்த்த அம்மாவின் சந்தோஷ கண்ணீர் அவன் மனதில் ஒரு"வைராகியத்தை"ஏற்படுத்தியது..அடுத்து வரும் ஒவ்வொரு இரவையும் இதைபோல் கடக்க வேண்டும் என்று தீர்மானித்தான்..இறுதியாக அவனை மரணம் வென்றபோது அவன் வயது"75"..அந்த சிறுவன் தான் உலகின் மிக சிறந்த மனோத்துவ நிபுணர் ''மில்டன் எரிக்சன்

No comments:

Post a Comment